சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி |
பிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. வருகிற 28ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் இந்திய சினிமாவில் இருந்து கமல்ஹாசன், ஏ.ஆர்.ரகுமான், மாதவன், நயன்தாரா, தமன்னா, இயக்குனர் பா.ரஞ்சித், ஐஸ்வர்யாராய், தீபிகா படுகோனே உட்பட பலர் கலந்து கொண்டு உள்ளார்கள். இவர்கள் அனைவருமே சிவப்பு கம்பள வரவேற்பில் பங்கேற்று உள்ளார்கள். இந்த விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் லே மஸ்க் என்ற திரைப்படம் மற்றும் பா.ரஞ்சித்தின் வெட்டுவம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது.
விழாவில் பேசிய பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, ‛‛இந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் ஜுரியாகும் வாய்ப்பு எனக்கு கிடைத்து உள்ளது. இதை நான் கற்பனை செய்து கூட பார்த்ததில்லை. எனது 15 ஆண்டுகால சினிமா பயணத்தில் இது ஒரு நம்ப முடியாத பயணமாக இருக்கிறது என்று கூறியுள்ள தீபிகா படுகோனே, கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு இந்தியா செல்லும் நிலை மாறி, கேன்ஸ் திரைப்பட விழா இந்தியாவிற்கு வரும் நிலை விரைவில் ஒருநாள் உருவாகும்'' என்று தெரிவித்திருக்கிறார்.