எட்டு நாளில் 120 கோடி வசூலித்த லோகா சாப்டர் 1 சந்திரா | ஆக்ஷன் மோடில் தோனி மற்றும் மாதவன் ; விளம்பரத்திற்காகவா ? | 2ம் பாகத்திற்கு கதை எழுதுகிறேன் : தொடரும் பட இயக்குனர் வைத்த சஸ்பென்ஸ் | இரண்டு படங்கள் தொடர் தோல்வி : 2025ல் வெற்றி கணக்கை துவங்காத பஹத் பாசில் | இருவரைக் காப்பாற்றி மீட்டெத்த 'மதராஸி' | செப்டம்பர் 12ல் 8 படங்கள் ரிலீஸ் | நடிகைகளை வைத்து பாலியல் தொழில் : பாலிவுட் நடிகை கைது | பிளாஷ்பேக் : இளையராஜாவுக்காக ஒரு வருடம் காத்திருந்த நதியா, பாசில் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர், சிவாஜியின் ஆஸ்தான வசனகர்த்தா | 'பிக்பாஸ்' விஜய் சேதுபதிக்கு 75 கோடி சம்பளம் |
பாலிவுட் சினிமாவின் எவர்கிரீன் டாப் 10 படங்களில் ஒன்று ஆனந்த். 1971ம் ஆண்டு வெளிவந்தது. ஹிரிகேஷ் முகர்ஜி இயக்கிய இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ராஜேஷ் கன்னா, சுமிதா சன்யல், ரமேஷ் டியோ உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். சாலி சவுத்ரி இசை அமைத்திருந்தார். அந்த காலத்தில் 98 லட்சம் ரூபாய் தயாரிக்கப்பட்ட இந்த படம் 40 கோடி வசூலித்து வெள்ளி விழா கொண்டாடியது.
நட்பு பற்றி இன்றைக்கு படங்கள் வந்து கொண்டே இருக்கிறது. அன்றைக்கு நட்பின் உன்னதத்தை பேசிய படம் இது. தற்போது இதனை 50 ஆண்டுகளுக்கு பின் ரீமேக் செய்ய இருக்கிறார்கள். படத்தின் அசல் தயாரிப்பாளரான என்.சி.சிப்பியின் பேரன் சமீர் ராஜ் சிப்பி, தயாரிப்பாளர் விக்ரம் காக்கருடன் இணைந்து இதனை தயாரிக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
ஆனால் ஆனந்த் ஒரு கிளாசிக்கல் மூவி அதனை ரீமேக் என்ற பெயரில் கெடுத்து விடாதீர்கள். அந்த படம் அப்படியே இருக்கட்டும் என்று ஒரு சிலர் கருத்து தெரிவித்து உள்ளார்கள். இன்னும் சிலர் அமிதாப் பச்சன் கேரக்டருக்கு அக்ஷய் குமாரையும், ராஜேஷ் கண்ணா கேரக்டருக்கு ரன்பீர் கபுரையும் சிபாரிசு செய்துள்ளனர்.