மீண்டும் துடிப்புடன் படப்பிடிப்புக்கு தயாரான மம்முட்டி | ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா |
பிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. வருகிற 28ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் இந்திய சினிமாவில் இருந்து கமல்ஹாசன், ஏ.ஆர்.ரகுமான், மாதவன், நயன்தாரா, தமன்னா, இயக்குனர் பா.ரஞ்சித், ஐஸ்வர்யாராய், தீபிகா படுகோனே உட்பட பலர் கலந்து கொண்டு உள்ளார்கள். இவர்கள் அனைவருமே சிவப்பு கம்பள வரவேற்பில் பங்கேற்று உள்ளார்கள். இந்த விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் லே மஸ்க் என்ற திரைப்படம் மற்றும் பா.ரஞ்சித்தின் வெட்டுவம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது.
விழாவில் பேசிய பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, ‛‛இந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் ஜுரியாகும் வாய்ப்பு எனக்கு கிடைத்து உள்ளது. இதை நான் கற்பனை செய்து கூட பார்த்ததில்லை. எனது 15 ஆண்டுகால சினிமா பயணத்தில் இது ஒரு நம்ப முடியாத பயணமாக இருக்கிறது என்று கூறியுள்ள தீபிகா படுகோனே, கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு இந்தியா செல்லும் நிலை மாறி, கேன்ஸ் திரைப்பட விழா இந்தியாவிற்கு வரும் நிலை விரைவில் ஒருநாள் உருவாகும்'' என்று தெரிவித்திருக்கிறார்.