கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! | ‛சூர்யா 45' படத்தின் தலைப்பு இதுவா? | செப்டம்பரில் ‛வா வாத்தியார்' படத்தை வெளியிட திட்டம்! |
சிட்டாடல் என்ற வெப் தொடரில் பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார். இதனை பிரியங்கா சோப்ரா நண்பர்களுடன் இணைந்து தயாரிக்கிறார். 4 ஆங்கில இயக்குனர்கள் இயக்குகிறார்கள். இதில் ரிச்சர்ட் மேடன், ஜோன்ஸ், ஸ்டேன்லி டச் உள்ளிட்ட ஹாலிவுட் கலைஞர்கள் நடிக்கிறார்கள். இது ஒரு சயின்ஸ் பிக்சன் ஸ்பை த்ரில்லர் கதை.
இந்நிலையில் முகத்தில் அடிபட்டு காயம் அடைந்தது மாதிரியான ஒரு படத்தை வெளியிட்டு, "வேலை கடினமாக இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார். படப்பிடிப்பின் போது நிஜமாகவே காயம் அடைந்தாரா பிரியங்கா அல்லது மேக்-அப்பா என்பதை அவர் கூறவில்லை.