ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
சமந்தா நடிப்பில் ‛சாகுந்தலம்' படம் விரைவில் வெளியாக உள்ளது. இதையடுத்து ஹரி - ஹரிஷ் இயக்கத்தில் யசோதா என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். 80 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐதராபத்தில் நடக்கிறது.
இந்த படத்தின் சிறிய முன்னோட்ட வீடியோவை வெளியிட்டுள்ளனர். சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லர் படமாக இருக்கும் என தெரிகிறது. இந்த படத்தில் நிறைய ஆச்சர்யங்கள் இருக்கிறது என்கிறார் தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத். மணிசர்மா இசையமைத்துள்ள இந்த படத்தை தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் ஆகஸ்ட் 12ம் தேதி வெளியிட உள்ளனர்.