பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

வாரிசு நடிகையாக அறிமுகமானாலும் திறமை இருந்தால் தான் சினிமாவில் தாக்குப்பிடித்து நிற்க முடியும் என்பதை வரலட்சுமி, கீர்த்தி சுரேஷுக்கு அடுத்தபடியாக நிரூபித்து வருபவர் கல்யாணி பிரியதர்ஷன். இவருக்கு கைகொடுக்கும் விதமாக அவர் நடிக்கும் படங்களும் வெற்றியை பெற்று வருவதால் அடுத்தடுத்து அவருக்கு படங்களும் ஒப்பந்தம் ஆகின்றன. அந்தவகையில் தற்போது மலையாளத்தில் டொவினோ தாமஸ் ஜோடியாக தள்ளுமால என்கிற படத்தில் நடித்து வருகிறார் கல்யாணி. மம்முட்டியை வைத்து உண்ட என்கிற ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் காலித் ரஹ்மான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் இருந்து கண்ணில் பெட்டோலே என்கிற பாடல் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த பாடல் மலையாளம் மற்றும் அரபி வார்த்தைகள் கலந்து எழுதப்பட்டுள்ளது. கல்யாணி இதுவரை நடித்த பாடல்களையும் படங்களையும் கணக்கிட்டு பார்த்தால் இந்த பாடலில் மட்டுமே அதிக அளவிலான விதவிதமான உடைகள் அணிந்து நடித்துள்ளார். இந்த பாடலும் துபாயில் தான் படமாக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கல்யாணிக்கும் இந்தப்பாடல் ஒரு அரபிக்குத்து என்று கூட சொல்லலாம்.




