ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' | சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் |
விஜய் நடித்த பிகில் படத்தில் கால்பந்து வீராங்கணையாக நடித்தவர் காயத்ரி ரெட்டி. மிஸ்.பெமினா போட்டியில் டைட்டில் வென்று அதன் மூலம் சினிமாவுக்கு வந்தவர். பிகில் படத்திற்கு பிறகு லிப்ட் படத்தில் நடித்தார். அதன்பிறகு சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். அர்ஜூன் நடத்திய சர்வைவர் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
இந்த நிலையில் தான் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாக போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார். இதையொட்டி சமீபத்தில் அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள காயத்ரி, "எனது திருமண நிச்சயதார்த்தம் எளிய முறையில் நடந்தது. இது காதல் திருமணம் அல்ல பெற்றோர்கள் முடிவு செய்த திருமணம், கணவர் பற்றிய விபரங்களை திருமணத்தின்போது தெரிவிக்கிறேன். திருமணத்திற்கு பிறகு நடிப்பது கணவரின் முடிவை பொருத்தது" என்று கூறியிருக்கிறார்.