பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு மரியாதை இல்லையா : பிரியாமணி பதில் | 'பாபநாசம்' படத்தில் என் முதல் சாய்ஸ் ரஜினிதான்: ஜீத்து ஜோசப் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் | இந்த வாரம் அப்பா, மகள் ; குரு, சிஷ்யன் படங்கள் மோதல் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது விக்ரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பஹத் பாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார் .
வருகின்ற ஜூன் 3ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. விக்ரம் படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில் விக்ரம் படத்தின் கேரளா திரையரங்க வெளியீட்டு உரிமையை பிரபல தயாரிப்பாளர் ரியா ஷிபு கைப்பற்றியுள்ளார். இவர் தன்னுடைய ஷிபூ தமீன்ஸ் நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்துள்ளார். விஜய் நடிப்பில் வெளியான புலி, மோகன்லாலின் சூப்பர் ஹிட் படமான புலிமுருகன், விக்ரம் நடிப்பில் வெளியான சாமி 2 உள்ளிட்ட படங்களை இவர்கள் தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.