'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
நடிகர் சிவாஜியின் 175வது படம் அவன்தான் மனிதன். சிவாஜியுடன், முத்துராமன், ஜெயலலிதா, மஞ்சுளா, மேஜர் சுந்தர்ராஜன், சோ, எம்.ஆர்.ஆர்.வாசு, சந்திரபாபு, சச்சு உள்பட பலர் நடித்திருந்தார்கள். விஸ்வநாத ராய் ஒளிப்பதிவு செய்திருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார். ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கி இருந்தார். 1975ம் ஆண்டு வெளியான இந்தப் படம் சிவாஜியின் வெள்ளி விழா படங்களில் ஒன்று. தற்போது இந்த படம் நவீன தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. நாளை (ஏப்.29) தமிழ்நாடு முழுவதும் வெளியாகிறது. பிலிம் விஷன் நிறுவனத்தின் சார்பில் கே.ராமு வெளியிடுகிறார்.