பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

சென்னை : 'பிசாசு 2 படத்தில் 15 நிமிட காட்சியில் நிர்வாணமாக நடிக்க வற்புறுத்தினர்' என, நடிகை ஆண்ட்ரியா கூறிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிஷ்கின் இயக்கத்தில் கதை நாயகியாக ஆண்ட்ரியா நடித்து உள்ள பிசாசு 2 படத்தின் முன்னோட்டம் நாளை(ஏப்., 29) வெளியாக உள்ளது. இப்படத்தில் ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் 'கட்டாயப்படுத்தி நிர்வாணமாக நடிக்க வைத்தனர்' என ஆண்ட்ரியா கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
'பிசாசு 2 கதையில், 15 நிமிட காட்சியில் நிர்வாணமாக நடிக்க வேண்டும் என்றனர். இதனால் நடிக்க மறுத்தேன். நான் மறுத்த போதும், என்னை கட்டாயப்படுத்தினர். பின்னர் கதை தரமானதாக இருந்ததால் அந்த காட்சியில் நடிக்க சம்மதித்தேன்' என ஆண்ட்ரியா கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்னவே, வடசென்னை படத்தில் படகில் எடுக்கப்பட்ட காட்சியில் ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்துள்ளார்; பின், அந்த காட்சி நீக்கப்பட்டது.
ஆண்ட்ரியா கூறிய இந்த தகவல் சர்ச்சையாகி உள்ளது.




