ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் | தமிழ் படத்தில் மாலத் தீவு நடிகை | பிளாஷ்பேக்: பக்தி படத்தில் விஜயகாந்த் | பிளாஷ்பேக்: வில்லத்தனத்தில் மிரட்டி, வறுமையில் வாடிய நடிகை | ஐமேக்ஸ் தியேட்டர்கள் : 'ஜனநாயகன், தி ராஜா சாப்' படங்களுக்குப் புதிய சிக்கல் | மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி? |

ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் பிரபாஸிற்கு சூப்பர் ஹிட்டாக அமைந்தன. அதன்பிறகு அவர் நடித்த சாஹோ, ராதேஷ்யாம் படங்கள் அதிர்ச்சி தோல்வியை கொடுத்தன. இந்த நிலையில் தற்போது ஆதிபுருஷ் படத்தில் நடித்து முடித்து விட்டவர், சலார் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் நடித்துக் கொண்டே தெலுங்கில் பிராஜக்ட் கே மற்றும் மாருதி இயக்கும் படங்களிலும் நடிக்க கமிட்டாகி இருந்தார் பிரபாஸ். ஆனால் தான் நடித்த இரண்டு படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்து விட்டதால், சலார் படத்தை மெகா ஹிட் படமாக கொடுத்துவிட வேண்டும் என்பதில் தனது கவனத்தை முழுமையாக திருப்பி இருக்கிறார் பிரபாஸ்.
தற்போது கேஜிஎப்- 2 படம் சூப்பர் ஹிட் அடித்திருப்பதால் சலார் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதனால் சலார் படத்தில் நடித்து முடிக்கும்வரை வேறு படங்களில் நடிக்கப்போவதில்லை என்று முடிவெடுத்துள்ள பிரபாஸ், நாக் அஸ்வின் இயக்கும் பிராஜெக்ட் கே மற்றும் மாருதி இயக்கும் படத்தை தற்காலிகமாக தள்ளி வைத்திருக்கிறார் என்ற தகவல் டோலிவுட்டில் வெளியாகியிருக்கிறது.




