'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி |
பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎப், கேஜிஎப் -2 என்ற இரண்டு மெகா படங்களையும் தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தற்போது பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்தை தயாரித்து வருகிறது. அடுத்து இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கெங்கரா அடுத்து இயக்கும் படத்தையும் இந்த நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கடந்த 21ஆம் தேதி ஒரு தகவல் வெளியிட்டனர்.
இந்த நிலையில் கன்னடத் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ராஜ்குமாரின் பேரன் யுவராஜ் குமார் அறிமுகமாகும் படத்தை தாங்கள் தயாரிக்க இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த யுவராஜ் குமார் நடிகர் ராஜ்குமாரின் இரண்டாவது மகனும் நடிகருமான ராகவேந்திராவின் மகன் ஆவார். இந்த படத்தை கன்னட சினிமாவில் ராஜகுமாரா, மிஸ்டர் அண்ட் மிஸஸ் ராமச்சாரி என பல படங்களை இயக்கியுள்ள சந்தோஷ் ஆனந்த் ராம் இயக்குகிறார். மேலும், இந்த யுவராஜ் குமாருக்கு சமீபத்தில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் சித்தப்பா ஆவார்.