‛மயோன் 2' உருவாகிறது | யானை படம் : பிரியா பவானி சங்கர் நம்பிக்கை | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கிர்த்தி ஷெட்டி | திருமணம் குறித்து எந்த ஐடியாவும் இல்லை : ஸ்ருதிஹாசன் | மதுரைக்கார இளைஞனாக மாறும் ஆர்யா | கமலுக்கு கோல்டன் விசா | பிரித்விராஜ் ஒரு கேரள கமல் : விவேக் ஓபராய் புகழாரம் | பாலியல் புகார் நடிகரின் ஜாமீனை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தை நாடும் கேரள அரசு | இயக்குனர் சங்கத்திற்காக ஒன்றிணையும் ஜீத்து ஜோசப் - பிரித்விராஜ் | மோகன்லாலுக்கு வில்லனாக மாறும் ஹரீஷ் பெராடி |
கொரோனா தாக்கம் ஆரம்பித்த சமயத்தில் இருந்து கடந்த இரண்டு வருடங்களில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டால் மலையாள திரையுலகில் தியேட்டர்களில் பெரிய அளவில் திரைப்படங்கள் திரையிடப்படவில்லை. அந்த சமயத்தில் ஓடிடி தளங்கள் மூலமாக தனது படங்களை அடுத்தடுத்து தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தவர் நடிகர் பிரித்விராஜ் தான். இந்த இரண்டு வருட காலத்தில் அவர் நடித்த குருதி, கோல்ட் கேஸ், பிரம்மம், ப்ரோ டாடி என நான்கு படங்கள் தொடர்ந்து ஓடிடியில் தான் வெளியாகின.
இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு பிரித்விராஜ் நடித்துள்ள ஜனகணமன திரைப்படம் நாளை (ஏப்ரல் 28) நேரடியாக தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது. டிஜோ ஜோஸ் ஆண்டனி என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடுவும் நடித்துள்ளார் ட்ரைவிங் லைசென்ஸ் படத்தை தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படம் என்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு இரு மடங்காகி உள்ளது.