பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

சென்னை: நடிகர் விமல் நடிப்பில் வெளிவந்த ‛மன்னர் வகையறா' படம் தொடர்பாக தயாரிப்பாளர் சிங்காரவேலன் - விமல் இடையே பிரச்னை இருந்து வந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாகவே ரூ.5 கோடி பண மோசடி செய்துவிட்டதாக இருவரும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்து வந்தனர். இந்த நிலையில் தனது பெயரை பயன்படுத்தி தயாரிப்பாளர் சிங்காரவேலன் பணமோசடி செய்ததாக நடிகர் விமல் அளித்த புகாரின் அடிப்படையில், தயாரிப்பாளர் சிங்காரவேலன் கைது செய்யப்பட்டுள்ளார்.




