பிப்-20ல் வெளியாகும் பிரியாமணி மலையாள படம் | எனக்கு அரெஸ்ட் வாரண்டா ? பொய் பரப்புவோர் மீது சோனு சூட் காட்டம் | ஆஸ்தான நடிகரையும் மோகன்லால் படத்தில் இணைத்துக் கொண்ட ஆவேசம் இயக்குனர் | வேட்டையன் படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்தேன் ; மலையாள நடிகர் அலான்சியர் லே | பிரதமர் மோடிக்கு நடன பொம்மைகளை பரிசளித்த நாகசைதன்யா - சோபிதா தம்பதி | தமிழில் வெப் தொடர் அறிமுகமாகிறார் ஜான்வி கபூர்! | போர் தொழில் இயக்குனரின் கதையில் அசோக் செல்வன்! | டாக்சிக் படத்தின் புதிய அப்டேட்! | பாலகிருஷ்ணாவிற்கு வில்லனாக ஆதி! | சிம்புவிற்கு ஜோடியாகும் சாய் பல்லவி! |
உயிர், மிருகம் போன்ற படங்களை இயக்கிய சாமி, தற்போது குழந்தைகள் படத்தை இயக்கியுள்ளார். ‛அக்கா குருவி' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு இளையராஜா 3 பாடல்களை அவரே எழுதி, இசையமைத்துள்ளார். சில்ட்ரன் ஆப் ஹெவன் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான ‛அக்கா குருவி' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஏப்.,25) நடைபெற்றது. இதில் பங்கேற்ற இளையராஜா பேசியதாவது: உலக சினிமாக்களை பார்ப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். அப்படி சில்ட்ரன் ஆப் ஹெவன் படத்தை பார்க்கும்போது எனக்கு மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது.
ஒரு ஷூவை வைத்துக் கொண்டு குழந்தைகளின் உலகத்தை தத்ரூபமாக தந்திருந்தது சிறப்பான அனுபவத்தை தந்தது. ஏன் இத்தகைய படங்கள் தமிழில் வருவதில்லை என்று எனக்கு வருத்தமாக இருந்தது. ஒரு கலைஞனுக்கு உயர்வான சிந்தனை தோன்றினால் தான் அவனை தாக்கினால் தான். இவன் உயர்வான ஒன்றை உருவாக்க முடியும். இப்படி படம் எடுக்க முடியும். அது நம் இயக்குநர்களிடம் இல்லை. அந்தக் குறையை தற்போது இயக்குனர் சாமி போக்கியுள்ளார்.
தற்போது சில்ட்ரன் ஆப் ஹெவன் படத்தை நம்முடைய ஊருக்கு தகுந்தவாறு கதையை மாற்றி ஒரிஜினல் படத்தைவிட சுவாரஸ்யமாக இயக்குனர் சாமி கொடுத்துள்ளார். இதுபோன்ற புதிய இயக்குனர்கள் வரவேண்டும் என விரும்புகிறேன். நான் முதன்முறையாக இயக்குனர் மணிரத்னத்திற்கு இசையமைத்ததற்கு இதுதான் காரணம். இதுபோன்ற நல்ல படைப்புகளை பொதுமக்கள் ஊக்குவிக்க வேண்டும். இத்தகைய படங்கள் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.