துபாயில் அட்லி - அல்லு அர்ஜுன் தீவிர ஆலோசனை | வீர தீர சூரன் OTT-யில் வருமா? வராதா? | நெட்பிளிக்ஸிலும் வரவேற்பை பெற்ற "டிராகன்" | எல் 2 எம்புரான் - முதல் நாள் முன்பதிவிலும் சாதனை | ராஜமவுலி படத்தில் நடிப்பதை உறுதி செய்த பிருத்விராஜ் | பதட்டத்துடன் சிக்கந்தர் படப்பிடிப்பை நடத்திய ஏ.ஆர். முருகதாஸ் | ஆஸ்கர் விருதுக்காக நான்காவது குழந்தை பெற்றுக் கொள்ள தயார் : வீர தீர சூரன் நடிகர் புதிய லட்சியம் | என் சகோதரி நல்லா நடித்திருக்கிறாரா? - பிரித்விராஜிடம் விசாரித்த அமீர்கான் | இளையராஜாவுக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க பரிசீலனை? | ஆன்லைன் முன்பதிவில் சாதனை படைத்த 'எல் 2 எம்புரான்' |
நடிகர் கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் மற்றும் முத்தையா இயக்கத்தில் விருமன் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும் இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் ஒரு புதிய படமும் , பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் சர்தார் படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த படங்களுக்கு பிறகு இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் புதிய படத்திற்காக கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவும் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அருண்ராஜா காமராஜ் தற்போது உதயநிதி நடிப்பில் நெஞ்சுக்கு நீதி படத்தை இயக்கி முடித்துள்ளார். அந்தப் படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது.