அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். திருமணமாகி நான்கு ஆண்டுகளில் அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தாங்கள் பிரிவதாக அறிவித்தார்கள். தற்போது இருவரும் அவரவர் படங்களில் பிஸியாக உள்ளனர்.
இந்நிலையில் நாகசைதன்யா இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி விட்டதாகவும் அவருக்கு பெற்றோர் பெண் பார்த்து வருவதாகவும் சோசியல் மீடியாவில் பரபரப்பு செய்திகள் வெளியாகி வந்தன. அந்த செய்திக்கு ஒரு விளக்கம் அளித்திருக்கிறார் நாகசைதன்யா.
அவர் கூறுகையில், ‛‛சமந்தாவும் நானும் இன்னும் சட்டப்படி பிரியவில்லை. ஆனால் அதற்குள்ளாக நான் இரண்டாவது திருமணத்துக்கு தயாராகி விட்டதாக வதந்திகள் வெளியாகி வருவது வருத்தத்தை அளிக்கிறது. இதுபோன்ற உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்'' என தெரிவித்திருக்கிறார் நாகசைதன்யா.