தனது உயிர் சென்னையில் பிரிய வேண்டும் என்று பேசியிருந்த சரோஜா தேவி | புதிய போட்டி வந்தாலும், சம்பளத்தை உயர்த்திய அனிருத் | தங்கள் தனிப்பட்ட சண்டையை மேடையில் பேசிய விஜய் சேதுபதி, பாண்டிராஜ் | ரவுடி சோடா பாபுவாக மாறிய அல்போன்ஸ் புத்திரன் | கமலை தொடர்ந்து நான்கு வேடங்களில் நடிக்கும் அல்லு அர்ஜுன் | எம்ஜிஆர் உடன் 26 ; சிவாஜி உடன் 22 படங்கள் : தமிழ் சினிமாவை கலக்கிய ‛கன்னடத்து பைங்கிளி' சரோஜா தேவி | துக்க வீட்டில் செல்பி எடுக்க முயன்ற ரசிகரை நெட்டி தள்ளிவிட்ட ராஜமவுலி | பயணம் எளிதல்ல! ; மங்காத்தா நடிகைக்கு அஜித் சொன்ன அட்வைஸ் | பழம்பெரும் நடிகையான ‛கன்னடத்து பைங்கிளி' சரோஜாதேவி காலமானார் | சுரேஷ்கோபி படத்துக்கு ஒரு வழியாக யு/ஏ சான்றிதழ் கொடுத்த சென்சார் |
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து தற்போது விக்ரம் நடிப்பில் கோப்ரா என்ற படத்தை இயக்கி இருக்கிறார். ஸ்ரீநிதி ஷெட்டி நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தப்படத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் பா. விஜய் எழுதிய ஆதிரா என்ற சிங்கிள் பாடலின் வீடியோ ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதை விக்ரம் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.