‛புஷ்பா 2' ; கூட்ட நெரிசலில் பெண் பலி : நடிகர் அல்லு அர்ஜுன் கைது | 100வது நாளில் 'தி கோட்' | 'புஷ்பா 2' வரவேற்பு : ராஜமவுலியை மிஞ்சினாரா சுகுமார்? | நேத்ரன் மறைவுக்கு பின் தீபா வெளியிட்ட பதிவு | பிக்பாஸ் எவிக்ஷனுக்கு பின் அர்னவின் சீரியல் என்ட்ரி | கீர்த்தி சுரேஷ் திருமணம் - தனி விமானத்தில் விஜய், த்ரிஷா பயணம் | கூலி படத்தின் ‛சிக்கிட்டு வைப்': ரஜினி ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த படக்குழு | கவுதம் மேனன் இயக்கும் படத்தில் ஜெயம் ரவி | துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டாவுடன் பாடகி ஜஸ்லீன் ராயல் | செல்வராகவனுடன் மூன்றாவது முறையாக இணையும் ஜி.வி.பிரகாஷ் |
நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு மிகப்பெரிய அறிமுகத்தை ஏற்படுத்தி கொடுத்த படம் அர்ஜுன் ரெட்டி. அந்த படம் பின்னர் ஹிந்தியில் ஷாகித் கபூர் நடிக்க கபீர் சிங் என்கிற பெயரில் ரீமேக் ஆக வெளியாகி அங்கேயும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்தின் கதாநாயகன் பெரும்பாலும் மதுவுக்கும் சிகரெட்டும் அடிமையானவனாகவும் பின் அதிலிருந்து மீண்டு வருவதாகவும் சித்தரிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அந்த படத்தில் நடித்தது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ள சாகித் கபூர், “கபீர் சிங் படத்தில் நடித்த பிறகு நான் புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்திவிட்டேன். அந்த படத்தில் நடித்தபோது தினமும் இருபது சிகரெட்டுகள் வரை குடிக்க வேண்டியிருந்தது. படப்பிடிப்பு முடிந்து கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கழித்தே சிகரெட் வாடை என்னிடமிருந்து அகன்றது. அதன்பின்னரே நான் வீட்டிற்கு சென்று மனைவியையும் குழந்தைகளையும் சந்திக்க முடிந்தது. தொடர்ந்து இப்படியே நடந்ததால் அடுத்து வந்த நாட்களில் நான் புகைப்பிடிக்கும் பழக்கத்தையே நிறுத்தி விட்டேன்'' என்று கூறியுள்ளார்