துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன் | வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' | சர்ச்சில் ரொமான்ஸ்: ஜான்வி கபூர் படத்திற்கு எதிர்ப்பு | பிளாஷ்பேக்: ரீ என்ட்ரி வாய்ப்புகளை மறுத்த சுவலட்சுமி | ‛கேங்ஸ்டர்' ஆக ‛லெஜண்ட்' சரவணன் | ஆண்ட்ரியா படத்தை பார்க்க நீதிபதிகள் முடிவு | சர்தார் 2 படத்தில் உள்ள சிக்கல் | பிளாஷ்பேக்: எழுத்தாளருக்கான தேசிய விருது பெற்ற முதல் நடிகை |
கடந்த இரண்டு வருடங்களில் தென்னிந்திய அளவில் முன்னணி நாயகி என்கிற இடத்தை பிடித்துவிட்டார் நடிகை பூஜா ஹெக்டே. மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன் படங்களில் கதாநாயகியாக நடித்தவர், சமீபத்தில் வெளியான ராதே ஷ்யாம் படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்திருந்தார் விரைவில் வெளியாக உள்ள ஆச்சார்யா படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதுமட்டுமல்ல தமிழில் நேற்றுமுன்தினம் வெளியான பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும் நடித்து தான் வலுவான இடத்தில் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார் பூஜா ஹெக்டே.
அதேசமயம் தெலுங்கில் விரைவில் வெளியாக இருக்கும் எப்-3 என்கிற படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் ஆடி இருக்கிறார் பூஜா ஹெக்டே. வெங்கடேஷ் மற்றும் வருண் தேஜ் இணைந்து நடித்துள்ள இந்த படத்தில் தமன்னா மெஹரின் பிர்ஷடா இருவரும் கதாநாயகியாக நடித்து உள்ளனர். அனில் ரவிபுடி இந்த படத்தை இயக்கியுள்ளார். வரும் மே இருபத்தி ஏழாம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கும் நிலையில் படத்தில் இடம்பெறும் இந்த முக்கிய பாடலை தற்போது படமாக்கி வருகின்றனர்.
ஏற்கனவே ராம்சரண் நடித்த ரங்கஸ்தலம் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியவர் தான் பூஜா ஹெக்டே என்பது குறிப்பிடத்தக்கது.