கொரில்லா பாணியில் நடந்த யெல்லோ படப்பிடிப்பு | தியாகராஜ பாகவதர் கதைக்கும், காந்தாவுக்கும் தொடர்பா? | ரஜினி, கமல் இணையும் படம் : இசையமைப்பாளர் யார்? | பாட்டியாக நடிக்கிறாரா ரோஜா? | பேய் கதைக்கு ‛ரஜினி கேங்' தலைப்பு ஏன்? | ஜி.வி.பிரகாஷின் 100வது படத்தில் பாடிய யுவன் சங்கர் ராஜா | மகன் விஷயத்தில் விஜய் ஒதுங்கி இருக்க இதுதான் காரணமா ? | 'கும்கி 2' தாமதம் ஏன்?: பிரபு சாலமன் விளக்கம் | தனுஷ் மருமகன் பவிஷ் நடிக்கும் ‛லவ் ஓ லவ்' | காமராஜாரை இழிவுபடுத்துகிறது: 'தேசிய தலைவர்' படத்திற்கு தடைகேட்டு வழக்கு |

சிரஞ்சீவி நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் படம் ஆச்சார்யா. கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ராம் சரண் நடித்துள்ளதுடன் இந்த படத்தை தயாரிக்கவும் செய்துள்ளார். இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும், ராம்சரணுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்த நிலையில் காஜல் அகர்வாலின் கதாபாத்திரத்தை இந்த படத்தில் இருந்து நீக்கி விட்டதாக ஒரு தகவல் பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்த படத்தில் நடிப்பதற்காக ஆரம்பத்தில் த்ரிஷா, தமன்னா உள்ளிட்ட கதாநாயகிகள் பேசப்பட்டு பல காரணங்களால் அவர்கள் இதிலிருந்து விலகிக்கொள்ள கடைசியாக இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆனவர் தான் காஜல் அகர்வால். அந்த படத்தில் நடிக்க ஆரம்பித்த சமயத்தில் தான் அவர் கர்ப்பமான தகவல் தெரிய வந்ததால் குறிப்பிட்ட நாட்கள் படமாக்கப்பட்ட காட்சிகளுடன் அதன்பிறகு படப்பிடிப்பிற்கு காஜல் அகர்வால் வரவில்லை என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் படத்தில் மிகப்பெரிய முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரம் என்பதால் படத்திலிருந்து அதை நீக்க முடிவு செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அதற்கேற்றவாறு சமீபத்தில் வெளியான டிரெய்லரில் கூட காஜல் அகர்வால் வரும் காட்சிகள் எதுவும் இடம்பெறவில்லை. அதுமட்டுமல்ல காஜல் அகர்வால் தனது சோசியல் மீடியா பக்கத்தில் அந்த ட்ரெய்லரை பகிர்ந்து கொள்ளவும் இல்லை என்பது இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக இருக்கிறது.