அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
மலையாள திரையுலகில் தற்போது மிகவும் அதிக அளவில் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றுதான் ‛சிபிஐ 5 ;தி பிரைன்'. மம்முட்டி நடிப்பில் கடந்த 1988ல் இருந்து இதுவரை நான்கு பாகங்களாக வெளியாகி உள்ள சிபிஐ படத்தின் ஐந்தாம் பாகமாக இது உருவாகி வருகிறது. நான்கு பாகங்களுக்கும் கதை எழுதிய கதாசிரியர் எஸ்.என்.சுவாமி இந்த பாகத்திற்கும் கதை எழுத, நான்கு பாகங்களையும் இயக்கிய இயக்குனர் கே.மது தான் இந்த பாகத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துவிட்டது. இந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளின்போது படப்பிடிப்பில் மம்முட்டி நடித்த காட்சிகளை திரையில் பார்த்து ரொம்பவே வியந்து போயுள்ளார் இயக்குனர் மது.
தனது வியப்பை வெளிப்படுத்தும் விதமாக அவர் கூறும்போது, 'ஹாலிவுட்டில் ஜேம்ஸ்பாண்ட் படங்களில் ஜேம்ஸ்பாண்ட் ஆக நடிப்பவர்கள் பல பேர் மாறிவிட்டனர். ஆனால் சிபிஐ படத்தில் ஐந்தாம் பாகத்திலும் மம்முட்டி தான் நடிக்கிறார். சிபிஐ முதல் பாகம் வெளியானபோது பார்ப்பதற்கு எப்படி காட்சி அளித்தாரோ. 34 வருடங்கள் கழித்து இப்போது ஐந்தாம் பாகம் உருவாகும்போதும் அந்த சேதுராம ஐயர் கதாபாத்திரத்தில் அதேபோன்ற உருவத்தை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியுள்ளார் மம்முட்டி" என்று தனது பெருமிதத்தை வெளிப்படுத்தியுள்ளார் இயக்குனர் மது.