எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
க்ரிஷ் இன்டர்நேஷனல் பிலிம் கிரியேசன், சீட்ஸ் என்டர்டைன்மென்ட் மற்றும் சண்முகம் கிரியேசன் இணைந்து தயாரிக்க, நடிகர் சதீஷ் நடிக்கும் திரில்லர் திரைப்படம் “சட்டம் என் கையில்”. இப்படத்தை 'சிக்சர்' படப்புகழ் இயக்குனர் சாச்சி இயக்கியுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிம்பு வெளியிட்டார்.
படம் குறித்து இயக்குநர் சாச்சி கூறியதாவது: பிரபல காமெடி நடிகர் சதீஷை மாறுபட்ட தோற்றத்தில் காட்ட வேண்டும் என்று நினைத்தேன். நடிகர் சதீஷ் காமெடி மட்டுமே செய்யக் கூடியவர் அல்ல, அவரின் திறமையை, அவரது வேறொரு பரிமாணத்தை “சட்டம் என் கையில்” படத்தில் பார்க்கலாம். அவரது தனித்துவமான நடிப்பு நிச்சயம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். என் முதல் படம் முழுக்க காமெடியை சுற்றியதாக இருந்தது. ஆனால் இந்த படம் அதிலிருந்து மாறுபட்டு பரபர திரில்லர் படமாக உருவாகியுள்ளது.
ஒரு இரவில் நடக்கும் கதை, நாயகன் டிரங்க் & டிரைவ் கேஸில் போலீசிடம் மாட்டுகிறார், அந்த இரவில் அவருக்கு நடக்கும் சம்பவங்கள் தான் இந்தப் படம். மென்மையாக ஆரம்பிக்கும் படம், ரசிகர்களை இருக்கை நுனியில் அமர்த்தி வைக்கும் பரபர திரில்லர் அனுபவமாக மாறிவிடும். நடிகர் பாவெல் நவகீதன் மற்றும் அஜய் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனைத்து மக்களையும் எளிதில் கவரும் படியாக, கமர்ஷியல் திரில்லராக இப்படம் இருக்கும். இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை ஒரு பிரபலம் வெளியிட்டால் நன்றாக இருக்குமென நடிகர் சிம்புவை அணுகினோம். உடனே ஒப்புக் கொண்டு, படத்தை பாராட்டி பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார். அவருக்கு இந்த நேரத்தில் எங்களது படக்குழுவினர் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு கூறினார்.