ஐந்து மொழிகளில் வெளியான 'பாகுபலி தி எபிக் டிரைலர்' | 'டியூட்' படத்தை அடுத்து 'பைசன்' வெற்றி விழா | அஜித் மார்பில் அம்மன் டாட்டூ : பக்திப் பரவசத்தில் ரசிகர்கள் | பாலிவுட் என்று அழைக்காதீர்கள் : ஜெயா பச்சன் காட்டம் | சர்ச்சையை ஏற்படுத்திய 'இந்தியாவின் பிக்கஸ்ட் சூப்பர் ஸ்டார்' | ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா |

நடிகர் தனுஷ் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடித்துவருகிறார். இதற்கு பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் வாத்தி படத்திலும் நடிக்க இருக்கிறார்.
மேலும் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ‛ராக்கி' படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கும் படத்திலும் தனுஷ் நடிக்க உள்ளார். இதற்கான படப்பிடிப்பு வருகின்ற ஜூலை மாதத்தில் துவங்க உள்ளது. படத்தில் தனுஷூக்கு வில்லனாக பிரபல நடிகர் விநாயகன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு தற்காலிகமாக ‛கேப்டன் மில்லர்' என தலைப்பு வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படம் 1930ல் நடக்கும் கேங்ஸ்டர் கதை எனவும் கூறப்படுகிறது. இந்த படம் தனுஷிற்கு பான் இந்திய திரைப்படம் எனவும் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சொல்லப்படுகிறது.




