'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தமிழ் சினிமாவில் ‛வேலைன்னு வந்துட்ட வெள்ளைக்காரன்' படத்தில் ‛புஷ்பா' என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் ரேஷ்மா பசுபலேட்டி. இவர் தென்னிந்திய மொழிகளில் சில படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தொலைக்காட்சி நடிகையாகவும் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டுள்ளார். ஆனால், இவர் தமிழில் முன்னணி நடிகரான பாபி சிம்ஹாவின் அக்கா என்பது பலருக்கு தெரியாது. பாபி சிம்ஹாவின் திருமணத்தில் கூட ரேஷ்மா கலந்து கொள்ளவில்லை. இதனால் ரேஷ்மாவிற்கு பாபி சிம்ஹாவிற்கும் பேச்சுவார்த்தை கிடையாது என்று கூட செய்திகள் பரவியது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நெறியாளர் ஒருவர் உங்களை பாபியுடன் சேர்த்து பார்க்கவே முடியவில்லையே? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ரேஷ்மா, 'நாங்கள் வீட்டில் சந்தித்துக் கொள்வோம். நிறைய போட்டோக்கள் இணையத்தில் இருக்கிறது. நாங்கள் ஒரே குடும்பம். அதை ஏன் விளம்பரப்படுத்த வேண்டும்' என அதில் கூறியுள்ளார்.