ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! | 20 கிலோ வெயிட் குறைத்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை குஷ்பு! | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிக்கும் ராம் சரண் | விஜய் சினிமாவை விட்டு செல்லக் கூடாது : இயக்குனர் மிஷ்கின் வேண்டுகோள் | இருமுடி கட்டி சபரிமலை சென்ற நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் | வீர தீர சூரன் 2 : அடுத்த வாரம் ஓடிடி ரிலீஸ் | ஆங்கிலத்தில் பேசச் சொன்ன தொகுப்பாளர் : தமிழில்தான் பேசுவேன் என்ற அபிராமி |
பார்த்திபன், தேவயானி நடித்த நினைக்காத நாளில்லை, தீக்குச்சி படங்களை இயக்கிய ஏ.எல்.ராஜா இயக்கும் புதிய படம் சூரியனும் சூரியகாந்தியும். டி.டி.சினிமா ஸ்டுடியோ தயாரிக்கிறது. அப்புக்குட்டி, ஶ்ரீ ஹரி, விக்ரம் சுந்தர் மூவரும் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். ரிதி உமையாள் கதாநாயகியாக நடிக்கிறார்.
இவர்களுடன் இயக்குனர் சந்தான பாரதி, இயக்குனர் செந்தில் நாதன், குட்டிப்புலி வில்லன் ராஜசிம்மன், இயக்குனர் ஏ.எல்.ராஜா உள்பட பலர் நடிக்கிறார்கள். திருவாரூர் ராஜா ஒளிப்பதிவு செய்கிறார், ஆர்.எஸ்.ரவி பிரியன் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குனர் ஏ.எல்.ராஜா கூறியதாவது: "சாதிகள் இல்லையடி பாப்பா, குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்" என்ற பாரதியாரின் பாடல் தான் கதையின் மையக் கருத்து. சூரியன் மேல் காதல் கொண்ட சூரியகாந்தி பூப்போல, கதாநாயகி, நாயகனை காதலிப்பதும், காதலுக்குள் சாதி பேய் நுழைந்து, என்ன செய்கிறது என்பதும் தான் படத்தின் கதை. மதுரை, தேனீ, திண்டுக்கல், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில், 35 நாட்களில் படப்பிடிப்பு நிறைவுப் பெற்று, இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. என்றார் ஏ.எல்.ராஜா.