தியாகராஜ பாகவதர் கதைக்கும், காந்தாவுக்கும் தொடர்பா? | ரஜினி, கமல் இணையும் படம் : இசையமைப்பாளர் யார்? | பாட்டியாக நடிக்கிறாரா ரோஜா? | பேய் கதைக்கு ‛ரஜினி கேங்' தலைப்பு ஏன்? | ஜி.வி.பிரகாஷின் 100வது படத்தில் பாடிய யுவன் சங்கர் ராஜா | மகன் விஷயத்தில் விஜய் ஒதுங்கி இருக்க இதுதான் காரணமா ? | 'கும்கி 2' தாமதம் ஏன்?: பிரபு சாலமன் விளக்கம் | தனுஷ் மருமகன் பவிஷ் நடிக்கும் ‛லவ் ஓ லவ்' | காமராஜாரை இழிவுபடுத்துகிறது: 'தேசிய தலைவர்' படத்திற்கு தடைகேட்டு வழக்கு | உருவக்கேலி வலிகளை ஏற்படுத்தும்: பிரீத்தி அஸ்ரானி |

அஸ்வின் குமார் இயக்கத்தில் ஜூலை 25ம் தேதி திரைக்கு வந்த அனிமேஷன் படம் 'மகாஅவதார் நரசிம்மா'. விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான நரசிம்ம அவதாரத்தை மையக்கருவாகக் கொண்டு இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது. கன்னடத்தில் உருவான 'கேஜிஎப், காந்தாரா' படங்களை தயாரிக்க ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைத்திருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியிடப்பட்ட இந்த படம் இதுவரை 175 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக அந்நிறுவனம் ஒரு போஸ்டருடன் எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது. அதோடு இந்தியாவில் வெளியான அனிமேஷன் படங்களில் 100 கோடியை கடந்த முதல் படம் இதுவாகும். இந்த படம் தொடர்ந்து வசூல் சாதனை செய்து வருவதால் 200 கோடிக்கு மேல் வசூலிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.