போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் |
ஆண்ட்ரியா தற்போது நடித்து வரும் படம் நோ எண்ட்ரி. அழகு கார்த்திக் என்ற புதுமுகம் இயக்குகிறார். ஆண்ட்ரியாவுடன் ரன்யா ராவ், ஆரவ் கண்ணதாசன், மானஸ், ஜெயஶ்ரீ உள்பட பலர் நடித்துள்ளனர். அஜீஸ் இசையமைக்க, ரமேஷ் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் அழகு கார்த்திக் கூறியதாவது: சுற்றுலாவிற்காக மேகாலயாவின் சிரபுஞ்சி செல்லும் ஒரு ஜோடி அங்கு தங்கவேண்டிய சூழ்நிலை உருவாகிறது. அப்போது மனிதர்களை வேட்டையாடும் நாய்க்கூட்டத்திடம் மாட்டிக்கொள்ளும் அந்த ஜோடி அங்கிருந்து எப்படி தப்பிகிறது, என்பதை பரபர திரைக்கதையில் திரில் பயணமாக சொல்லும் படம்.
மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சி எனும் சுற்றுலா தளம் இந்தியாவின் சிறப்புமிகு இடங்களில் ஒன்று அதன் காடுகளையும், மலைகளையும், மலைகளுக்கு நடுவே புதைந்து கிடக்கும் குகைகளிலும் படமாக்கி உள்ளோம். காட்டுக்கு நடுவே கட்டப்பட்ட மூங்கில் வீட்டில் முரட்டு நாய்களுக்கு மத்தியில் மாட்டிக் கொண்ட மனிதர்கள் நாய்களிடம் இருந்து தப்பிக்கும் சாகச காட்சிகள் கடின உழைப்புடன் படமாக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ரியா உண்மையில் நாய்களை நேசிப்பவர் என்பதால் படத்தில் எந்த இடத்திலும் பயம் இல்லாமல், மிக எளிதாக நாய்களுடன் இணைந்து நடித்துள்ளார். அவருடன் நடிப்பதற்காக நாய்களுக்கு 25 நாட்களுக்கு சிறப்பு பயிற்றி அளித்தோம். இதுவரையிலான தமிழ் சினிமாவில் இல்லாத புது அனுபவத்தை இந்தப்படம் தரும். என்றார்.