ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
கும்கி படத்தில் அறிமுகமான லட்சுமி மேனன், குட்டிபுலி, பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன் என தொடர் வெற்றிகளை கொடுத்து வேகமாக வளர்ந்தார், வேதாளம் படத்தில் அஜித் தங்கையாக நடித்தார், அதன்பிறகும் கூட மிருதன், றெக்க படங்களில் நடித்தார்.
இடையில் அவருக்கு என்ன ஆச்சு? என்று தெரியவில்லை. எனக்கு நடிப்பை விட படிப்புதான் முக்கியம் என்றார். சில ஆண்டுகள் படம் இன்றி இருந்தவர் தற்போது ஒரு சில படங்களில் மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதில் மலை என்ற படத்தில் அவர் யோகிபாபு ஜோடியாக நடிப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் சீனு ராமசாமி மற்றும் இயக்குனர் சுசீந்திரனின் உதவியாளராக இருந்த முருகேஷ் இயக்குகிறார்.
படம் பற்றி அவர் கூறியதாவது: இந்தப் படம் மலைப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை மையமாக கொண்டு உருவாகவுள்ளது, மலை படத்தில் ஒரு கதாப்பாத்திரமாகவே இருக்கும். இந்தப் படத்தில் லட்சுமி மேனன் நகரத்தில் இருந்து கிராமத்துக்கு வரும் ஒரு மருத்துவராக நடிக்கிறார், அந்த கிராமத்தில் அவருக்கு நடக்கும் நிகழ்வுகள் அவரது வாழ்க்கையை மாற்றி விடுகிறது.
யோகி பாபு இந்தப் படத்தில் மிகவும் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார், லட்சுமி மேனன், யோகிபாபு இருவருக்கும் இடையே நடக்கும் நிகழ்வு இப்படத்தில் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றது. மேலும் காளி வெங்கட் கதாபாத்திரம் அனைவராலும் பெரிதும் பேசப்படும், சிங்கம்புலி மற்றும் ராமச்சந்திரன் ஆகியோரிடன் மேலும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் நடிகை லட்சுமி மேனன், நடிகர் யோகி பாபு ஜோடியாக நடிக்கவில்லை. ஆனால் இருவரின் கதாபாத்திரம் திரையில் சுவாரசியத்தை ஏற்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது. என்றார்.