ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

அஞ்சாதே படத்தின் மூலம் அறிமுகமானவர் அஜ்மல், அதன்பிறகு போதிய வாய்ப்புகள் இல்லாமல் இருந்தவர் கோ படத்தின் மூலம் வில்லன் ஆனார். மீண்டும் சில படங்களில் ஹீரோவாக நடித்தவர் அதன்பிறகும் போதிய வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். மத்திய சென்னை, காட்டு பயசார் இந்த காளி, படங்களை தயாரித்து அதில் தானே ஹீரோவாக நடித்தவர் ஜெய்வந்த். ஹீரோவாக ஜெயிக்க போராடிக் கொண்டிருப்பவர்களில் ஒருவர்.
சிவாஜியின் பேரன் துஷ்யந்த் (ராம்குமாரின் மகன்). சக்சஸ் என்ற படத்தில் அறிமுகமாக அதன்பிறகு மச்சி என்ற படத்தில் நடித்தார். இரண்டு படமுமே கை கொடுக்காத நிலையில் நடிப்பில் இருந்து விலகினார்.
இந்த மூவரும் தற்போது தீர்க்கதரிசி என்ற படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். ஸ்ரீ சரவணா பிலிம்ஸ் சதிஷ் குமார் தயாரிக்கிறார், பி.ஜி.மோகன் , எல்.ஆர்.சுந்தரபாண்டி இணைந்து இயக்குகின்றனர். ஜி.பாலசுப்பிரமணியம் இசை அமைக்கிறார், ஜெ.லட்சுமண குமார் ஒளிப்பதிவு செய்கிறார். பூஜையுடன் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியது. ரீ எண்ட்ரி ஆகும் மூன்று ஹீரோக்களுக்கும் தீர்க்கதரிசி திருப்பம் தருவாரா என்பது படம் வெளியானதும் தெரியும்.




