'அறம்' தயாரிப்பாளர் ராஜேஷ் நாயகனாக நடித்த 'அங்கீகாரம்' டிரைலர் வெளியீடு | டிக்கெட் உயர்வை அனுமதிக்க மாட்டோம்: தெலுங்கானா தியேட்டர் சங்கம் | என்னை யாரும் கண்டுகிடலை.. நொறுங்கிய என் ஈகோ: பெங்களூருவில் ரஜினிகாந்த் பேச்சு | 6 மொழிகளில் தயாராகும் சிலந்தி 2ம் பாகம் | தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் மோசடி: சிவகார்த்திகேயன் எச்சரிக்கை | தமிழில் மீண்டும் ஒரு ஜோம்பி படம் | ரவி மோகன் விருது விழாவில் கெனீஷாவின் இசை நிகழ்ச்சி | பிளாஷ்பேக்: குஷ்புவை நிராகரித்த பார்த்திபன் | பிளாஷ்பேக்: தணிக்கை குழுவால் சிதைக்கப்படட 'நல்ல தீர்ப்பு' | 2026 - வசூல், லாபத்தில் முதலிடத்தில் 'தாய் கிழவி' |

'அஞ்சாதே' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அஜ்மல் அமீர். தொடர்ந்து வெற்றிச்செல்வன், இரவுக்கு ஆயிரம் கண்கள், நுங்கம்பாக்கம், நெற்றிக்கண் உள்பட பல படங்களில் நடித்தார். கடைசியாக விஜய் உடன் 'கோட்' படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் மீது 'சினம்' ,'உயிர் வரை இனித்தாய்' போன்ற படங்களில் நடித்துள்ள நர்வினி டெரி ரவிசங்கர் பாலியல் புகார் கூறியுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது : எனது நண்பருடன் ஒரு மாலுக்கு சென்றிருந்தேன். அங்கு நடிகர் அஜ்மல் அமீரை சந்தித்தேன். அவர் என்னிடம் வந்து, 'நான் எனது அடுத்த படத்துக்கு ஹீரோயின் தேடிக்கொண்டு இருக்கிறேன். ஆடிஷனுக்கு வருகிறீர்களா?' என்று கேட்டார். மறுநாள் நான் ஆடிஷனுக்கு அவரது அலுவலகத்துக்கு சென்றேன். அங்கு அவர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார்.
அவருடன் நடனம் ஆடச்சொல்லி வற்புறுத்தினார். நான், முடியாது என்று சொன்னேன். என்னை கட்டிப்பிடிக்க முயற்சித்தார். உடனே யாரோ ஒருவர் காலிங்பெல்லை அழுத்தினார். அஜ்மல் கதவை திறந்ததும் நான் வெளியே ஓடி வந்துவிட்டேன். இந்த விஷயத்தை நான் அப்படியே விட்டுவிட்டு வந்திருக்க கூடாது. அன்றிரவு நான் டென்மார்க் நாட்டுக்கு செல்ல வேண்டியிருந்தது.
சில மாதங்கள் கழித்து இந்த விஷயத்தை திரைத்துறையை சேர்ந்த எனது நண்பர் ஒருவரிடம் சொன்னேன். அவர் அஜ்மலை நேரில் அழைத்து கண்டித்துள்ளார். அப்போதே அஜ்மல் மீது போலீசில் புகார் கொடுத்திருக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால், சினிமாவில் பல நல்ல மனிதர்களும் இருக்கின்றனர். அதனால் நான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.




