விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
காமராஜர் வாழ்க்கை வரலாற்றை 'காமராஜ்' என்ற பெயரிலும், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை "வெல்கம் பேக் காந்தி" என்ற பெயரிலும் தயாரித்த 'ரமணா கம்யூனிகேஷன்ஸ்' நிறுவனம், தற்போது திருக்குறளை வைத்து 'திருக்குறள்' என்ற படத்தைத் தயாரித்துள்ளது. ஏ.ஜே.பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.
வள்ளுவராக கலைச்சோழன், வாசுகியாக தனலட்சுமி, பாண்டிய மன்னனாக ஓ.ஏ.கே.சுந்தர், நக்கீரராக இயக்குநர் சுப்ரமணிய சிவா, புலவர் பெருந்தலைச்சாத்தனாக கொட்டாச்சி ஆகியோருடன், குணாபாபு, பாடினி குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். இளையராஜா பாடல்கள் எழுதி, இசையமைத்துள்ளார். சகாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். வருகிற 27ம் தேதி வெளியாகும் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடந்தது.
விழாவில் படத்தின் இயக்குனர் பாலகிருஷ்ணன் பேசியதாவது: இந்த படம் உருவான கதையை ரொம்ப சுருக்கமாக சொல்லி விடுகிறேன். திருக்குறளை படமாக பண்ணுங்கன்னு ஒருத்தர் வேண்டுகோள் வைத்தார். எப்படி 1330 குறளை படமாக எடுக்க முடியும்னு யோசித்த போது எங்களுக்கு முன்னுதாரணமாக இருந்தது கருணாநிதியின் குரளோவியம். எதை ஓவியமா பண்ண முடியுமோ? அவர் அதை புத்தகமா எழுதிவிட்டார். அதிலிருந்து நாங்கள் எதையெல்லாம் காட்சிப்படுத்த முடியுமோ? அந்த குறள்களை எல்லாம் எடுத்துக் கொண்டோம் .
இந்த படத்துக்கான பணம் அது அதன் போக்குல வந்தது. இதுல எந்த சிரமமுமே எனக்கு இல்லை. வாழ்க்கையில பல விஷயங்கள் அதன் போக்குல தான் அதுவாக நிகழும். படம் செட் போட்டோம் அந்த நாள் முழுக்க மழை, செட் முழுக்க மழை, இடும்பைக்கு இடும்பை குறள் தான் ஞாபகம் வந்தது. அதைத்தாண்டி படம் முடித்தோம்.
அப்புறம் இளையராஜா சார் கிட்ட போனோம். படத்தை பார்த்து அவருக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அற்புதமான இசையை தந்தார். தனலட்சுமி வாசுகியா நடித்துள்ள பெண், அவருக்கு முதல் படம், அவங்க வாழ்க்கையில முன்னுக்கு வரணும். இந்த துறையில ஜொலிக்கணும். என்றார்.