கிண்டல் செய்த ரசிகருக்கு மாளவிகா மோகனன் கொடுத்த பதிலடி | நடிகர் ஸ்ரீ எழுதிய ஆங்கில நாவல் வெளியானது! | தக் லைப் படம் ரிலீஸை தடுத்தால் வழக்குப்பதிவு: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை! | குபேரா படத்திற்கு 19 இடங்களில் கட் கொடுத்த சென்சார் போர்டு | விஜய்யை தொடர்ந்து ரஜினியை இயக்குகிறாரா வினோத்? | அஜித் குமாரை நேரில் சந்தித்த யுவன் சங்கர் ராஜா | விக்ரம் பிரபுவின் ‛லவ் மேரேஜ்' டிரைலர் வெளியீடு | 50 கோடியில் காசி செட் : ராஜமவுலி படத்துக்காக தயாராகுது | ‛பஞ்சாயத்து' சீரிஸ் என்னை இந்தியா முழுக்க அறிய வைத்திருக்கிறது - நீனா குப்தா பெருமிதம் | டிஎன்ஏ படத்தை அவங்களுக்கு அர்ப்பணிக்கிறேன் : ஹீரோ அதர்வா முரளி நெகிழ்ச்சி |
ஆந்திர அரசியலில் மிகப்பெரிய அளவில் கோலார்ச்சியவர் மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி. தற்போது அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவின் முதல்வராக பதவி வகித்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு மம்முட்டி நடிப்பில் யாத்ரா என்கிற பெயரில் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளியானது. மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றது.
தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் யாத்ரா 2 என்கிற பெயரில் தயாராகி வருகிறது. இந்த படத்தில் மம்முட்டியுடன் ஜெகன்மோகன் ரெட்டியின் கதாபாத்திரத்தில் ஜீவாவும் நடித்துள்ளனர். இரண்டாம் பாகம் ஜெகன்மோகன் ரெட்டியின் அரசியல் பயணத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது. வரும் பிப்ரவரி மாதம் இந்த படம் திரைக்கு வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் மகி ராகவ் தான் இந்த படத்தையும் இயக்குகிறார்.
இன்னொரு பக்கம் அரசியல் தலைவர்கள் மற்றும் முன்னணி சினிமா நடிகர்கள் பற்றி பரபரப்பான சுயசரிதை படங்களை எடுத்து வரும் பாலிவுட் இயக்குனர் ராம் கோபால் வர்மா இதே ஜெகன்மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து வியூகம் என்கிற பெயரில் படம் ஒன்றை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் கதாபாத்திரத்தில் நடிகர் அஜ்மல் அமீர் நடித்துள்ளார்.
ஒரே நேரத்தில் இப்படி இரண்டு இயக்குனர்கள் ஒரே நபரின் சுயசரிதையை படமாக எடுத்து வருவதால் இரண்டும் எப்படி உருவாகி இருக்கும், வெளியாகும்போது என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் ரசிகர்களிடம் எப்படி வரவேற்பு பெரும் என்பதை அறிந்து கொள்ள ஆவலாக காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார் நடிகர் அஜ்மல். அது மட்டுமல்ல யாத்ரா-2 படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் அஜ்மல்.