அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
எமினென்ட் என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் டேனியல் கிரிஸ்டோபர் மற்றும் தென்னிலவன் ஆகியோர் தயாரிக்கும் படம் இயல்வது கரவேல். அறிமுக இயக்குனர் எஸ்.எல்.எஸ். ஹென்றி இயக்கும் இந்தப் படத்தில் கதிர் கதாநாயகனாக நடிக்க, குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த யுவலக்ஷ்மி முதல் முறையாக இப்படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார்.
மாஸ்டர் படத்தில் இளம் வயது வில்லனாக நடித்த மாஸ்டர் மகேந்திரன் இந்த படத்தில் கதிருக்கு வில்லனாக நடித்திருக்கிறார். இதுகுறித்து படத்தின் இயக்குனர் ஹென்றி கூறியதாவது: சென்னையின் பழமை வாய்ந்த கல்லூரியில் நடக்கும் காதல் மற்றும் மாணவர்கள் அரசியலை அடிப்படையாக கொண்ட இந்த படத்தில் கதிருக்கு வில்லனாக மாஸ்டர் மகேந்திரன் நடிக்கிறார். மாஸ்டர் மகேந்திரனை இதுவரை பார்த்திராத ஒரு புதிய கோணத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்திலும் இந்தப்படத்தில் பார்க்கலாம். என்றார்.