படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
2022ம் ஆண்டில் எது பிரபலமானதோ இல்லையோ 'பான்--இந்தியா' என்பது சினிமா வட்டாரங்களில் பிரபலமானது. கடந்த வருடக் கடைசியில் வெளிவந்த தெலுங்குப் படமான 'புஷ்பா' பான்--இந்தியா படமாக வெளியாக வசூலைக் குவித்தது. அதற்கடுத்து கடந்த மாதம் வெளிவந்த 'ஆர்ஆர்ஆர்' படமும் வசூலைக் குவித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், தென்னிந்தியாவிலிருந்து 1000 கோடி வசூலுக்கும் மேல் வாரிக்குவித்த 'பான்--இந்தியா'வை இங்கு பிரபலமாக்கிய பிரபாஸ் நடித்து கடந்த மாதம் வெளிவந்த 'ராதே ஷ்யாம்' தோல்வியைச் சந்தித்தது.
அடுத்து வரும் ஏப்ரல் 13ம் தேதி விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' தமிழ்ப் படமும், 14ம் தேதி வெளியாக உள்ள 'கேஜிஎப் 2' கன்னடப் படமும் பான்--இந்தியா படங்களாக வெளியாக உள்ளன.
'கேஜிஎப் 2' டிரைலர் கடந்த வாரம் 5 மொழிகளில் வெளியாகி 160 மில்லியன் பார்வைகளைக் கடந்துவிட்டது. விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' படத்தின் தமிழ் டிரைலர் இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி 30 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. அடுத்து 'பீஸ்ட்' ஹிந்தி டிரைலர் மாலை 6 மணிக்கு வெளியானது. தெலுங்கு டிரைலர் ஏப்ரல் 5 ம் தேதி வெளியாகிறது.
அதற்கு முன்பாக மாலை 4 மணிக்கு 'அரபிக்குத்து' பாடல் ஹிந்தி, தெலுங்கில் வெளியாக உள்ளது. இரண்டு மொழி டிரைலர்களும், பாடல்களும் சில பல மில்லியன் பார்வைகளைக் கடந்து விஜய்யும் 'பான்--இந்தியா' நடிகராக பிரபலமாவார் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.