சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

கடைசியாக ஜேம்ஸ் பாண்டாக நடித்து வந்தவர் டேனியல் க்ரேக். ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் 25வது படமான நோ டைம் டூ டை படத்தில் நடித்தார். இதுவே எனது கடைசி படம் இனி ஜேம்ஸ் பாண்டாக நடிக்க மாட்டேன் என்று அறிவித்தார்.
தற்போது அவர் வெப் சீரிஸ்களிலும், நாடகங்களிலும் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தார். தற்போது அவருக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
நியுயார்க்கில் உள்ள பிராட்வே நாடக குழு மிகவும் பிரபலமானது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்றால் பெரும் பொருளாதார சிக்கலை எதிர்கொண்டுள்ள இந்த நாடக குழுவிற்காக ஒரு நாடகத்தில் நடித்து தர டேனியல் ஒப்புக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நாடகம் தொடங்குவதற்கு சில மணிநேரம் முன்னதாக டேனியலுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நாடகம் ரத்து செய்யப்பட்டது. டேனியல் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.




