சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

சமீபத்தில் முதுமை காரணமாகவும், நினைவிழப்பு நோய் காரணமாகவும் சினிமாவில் இருந்து விலகுவதா ஹாலிவுட் நடிகர் புரூஸ் வில்லிஸ் அறிவித்த நிலையில் தற்போது சினிமாவில் இருந்து விலகுவதாக ஹாலிவுட் காமெடி நடிகர் ஜிம் கேரி அறிவித்துள்ளார்.
1983ல் வெளியான தி செக்ஸ் அன்ட் வயலென்ஸ் பேமிலி ஹவர் என்ற படத்தில் அறிமுகமானார் ஜிம் கேரி. அதன் பிறகு அவர் நடித்த ஏஸ் வென்ச்சுரா: பெட் டிடெக்டிவ், டம்ப் அன்ட் டம்பர் போன்ற படங்கள் பெரும் வரவேற்பை பெற்றது. அவர் நடித்த மாஸ்க் படம் மூலம் உலக புகழ்பெற்றார். இவைகள் தவிர ப்ரூஸ் தி அல்மைட்டி, பேட்மேன் ஃபார் எவர், கிக்-ஆஸ் 2, லயர் லயர் உள்பட பல படங்களில் அவர் காமெடி ஹீரோவாக நடித்தார்.
2020ம் ஆண்டு வெளிவந்த சோனிக் ஹெட்ஜ்ஹாக் படத்தின் 2ம் பாகத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்த நிலையில் இந்த படம் தான் எனது கடைசி படம், இனி நடிக்க மாட்டேன். ஓய்வெடுக்கப் போகிறேன். என்று ஜிம் கேரி அறிவித்துள்ளார். இது உலகம் முழுக்க உள்ள அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.




