முகராசி, ஆட்டோகிராப், 96 - ஞாயிறு திரைப்படங்கள் | நமது தேசத்திற்கு எனது பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளதை பாக்கியமாகக் கருதுகிறேன் - அஜித் நன்றி | நடிகர் அஜித், நடிகை ஷோபனாவிற்கு பத்ம பூஷன் விருது | இயக்குனரைக் கவர்ந்த ராஷ்மிகாவின் கண்கள் | ஓராண்டிற்கு பின் இந்து தமிழ் முறைப்படி இரண்டாவது முறை திருமணம் செய்த லப்பர் பந்து நாயகி | வீடு வாடகை பிரச்னை ; கலைமாமணி பட்டத்தை காணவில்லை : கதறும் கஞ்சா கருப்பு | பெண் தயாரிப்பாளர் புகார் : உன்னி கிருஷ்ணன் மீது வழக்கு | அருண் விஜய்க்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற மிகப்பெரிய ஹீரோவின் கோரிக்கையை நிராகரித்த மகிழ்திருமேனி | மகள் பவதாரிணி மறைந்து ஓராண்டு : இளையராஜா உருக்கம் | ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடிப்பது உறுதி |
தெலுங்குத் திரையுலகத்திலிருந்து அடுத்த மெகா வெற்றியாக 'ஆர்ஆர்ஆர்' படம் அமைந்துள்ளது. ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்த படம் 800 கோடி வசூலைக் கடந்துள்ளது.
இப்படம் கடந்த நான்காண்டுகளுக்கும் மேலாக தயாரிப்பில் இருந்தது. படத்தில் நடித்த ஜுனியர் என்டிஆர், ராம்சரண், தொழில்நுட்பக் கலைஞர்கள் யாரும் வேறு எந்தப் படங்களிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளாமல் 'ஆர்ஆர்ஆர்' படத்திற்காக மட்டுமே உழைத்தனர்.
படம் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற பிறகு அதற்காக கடுமையாக உழைத்த சில முக்கிய டெக்னீஷியன்கள், உதவி இயக்குனர்கள் ஆகியோருக்கு அன்புப் பரிசாக 11 கிராம் தங்க நாணயம் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் ராம்சரண். அவர்களுடன் காலை சிற்றுண்டி சாப்பிட்டு அவர்களுக்கு இனிப்புகளுடன், தங்க நாணயத்தை வழங்கி தன் அன்பையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி உள்ளார்.
ராஜமவுலி இயக்கத்தில் இதற்கு முன்பு ராம்சரண் கதாநாயகனாக நடித்த 'மகதீரா' படம் பெரிய வெற்றியையும் வசூலையும் குவித்த ஒரு படம். 'பாகுபலி' படம் வருவதற்கு முன்பு அந்தப் படம்தான் தெலுங்கில் அதிக வசூலைக் குவித்த படமாக இருந்தது. அதற்குப் பிறகு வெளிவந்த சில படங்கள் அந்த சாதனையை முறியடித்தது. இப்போது மீண்டும் ராஜமவுலி - ராம்சரண் கூட்டணி 'ஆர்ஆர்ஆர்' படத்தின் மூலம் தெலுங்கில் அதிக வசூலைப் பெற்ற படமாக முதலிடத்தில் உள்ளது.