'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. தற்போது பொன்னியின் செல்வன், விருமன் படங்களில் நடித்து முடித்துள்ளார். அடுத்து சர்தார் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கார்த்தி நடிப்பில் ஏப்ரல் 2ல் வெளியான சில படங்கள் சினிமாவில் அவருக்கு முக்கிய இடத்தை தந்துள்ளது. குறிப்பாக அவரின் சூப்பர் ஹிட் படங்களான பையா, கொம்பன் மற்றும் சுல்தான் ஆகிய மூன்று படங்களும் இந்த தினத்தில் வெளியானவை.
இதுப்பற்றி கார்த்தி கூறுகையில், ‛‛பையா படம் எனக்கு புது பிம்பத்தை வெளிப்படுத்த வித்திட்டது. எட்டு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் என்னை கிராமத்து மண்ணுக்கு கொம்பன் அழைத்துச் சென்றது. சுல்தான் மீண்டும் என்னை வாண்டுகளை வசப்படுத்த வைத்தது. இவை எல்லாமே ஒரே வெளியீட்டு தேதியில் தான். இந்தப் படைப்புகளை நினைவுகளில் நிலைநிறுத்திய இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி'' என்கிறார்.