Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'பீஸ்ட்' டிரைலர் - பயமா இருக்கா?, பயங்கரமா இருக்கா?

02 ஏப், 2022 - 18:21 IST
எழுத்தின் அளவு:
Beast-Trailer-out

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்துள்ள 'பீஸ்ட்' படத்தின் டிரைலர் சற்று முன்னர் யு டியூபில் வெளியானது. இப்படத்தின் இரண்டு சிங்கிள் பாடல்களான 'அரபிக்குத்து, ஜாலி ஓ ஜிம்கானா' ஆகிய பாடல்கள் ஏற்கெனவே ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள 'பீஸ்ட்' டிரைலர், யூ டியூப் பார்வை எண்ணிக்கையில் புதிய சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

யோகி பாபு நடித்து 2019ல் வெளிவந்த 'கூர்க்கா' படத்தின் கதையையே மீண்டும் படமாக்கி உள்ளார்களோ என்ற சந்தேகம் வருகிறது. ஒரு ஷாப்பிங் மாலுக்குள் மக்கள் பலரை தீவிரவாதிகள் கடத்தி வைத்திருப்பார்கள். அந்த மாலுக்குள்ளேயே செக்யூரிட்டி வேலை பார்க்கும் யோகி பாபு எப்படி காப்பாற்றுகிறார் என்று நகைச்சுவையாகச் சொன்ன படம்தான் 'கூர்க்கா'.


இந்தப் படத்தில் அதே மால், அதே மக்கள், அதே செக்யூரிட்டி, கூர்க்கா யோகி பாபுவுக்குப் பதில் சோல்ஜர் விஜய். இதில் என்ன ஒரு விசேஷம் என்றால் 'கூர்க்கா' படத்தில் கதாநாயகனாக நடித்த யோகி பாபு, இந்த 'பீஸ்ட்' படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.

'பீஸ்ட்' படத்தின் முழு கதையும் இந்த மாலுக்குள்ளேயே தான் நகரும் போலிருக்கிறது. டிரைலரின் ஆரம்பமே மிகச் சாதாரணமாக இருக்கிறது. எந்த ஒரு அதிரடியும் இல்லை. விஜய்யின் ஆக்ஷன் காட்சிகள் அவரது ரசிகர்களுக்குப் பிடிக்கலாம். டிரைலரில் ''பயமா இருக்கா, இதைவிட இன்னும் பயங்கரமா இருக்கும்” மற்றும் “ஐயாம் எ சோல்ஜர்” என்ற இரண்டே வசனங்களைத்தான் பேசுகிறார் விஜய். டிரைலர் முழுவதிலும் செல்வராகவனுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்துள்ளது போல் இருக்கிறது.


டிரைலரில் நாயகி பூஜா ஹெக்டே, ஜுனியர் ஆர்ட்டிஸ்ட் போல ஒரே ஒரு காட்சியில்தான் வந்து போகிறார். டிரைலரில் ஒரே ஒரு பாடல் ஒலிக்கிறது. அனிருத்தின் பின்னணி இசையிலும் அதிரடி குறைவுதான்.

டிரைலர் உண்மையிலேயே எப்படி இருக்கிறது என்று சொன்னால், விஜய் பேசியுள்ள வசனத்தை வைத்தே சொல்லலாம்.

'பயமா இருக்கு'......அவ்ளோதான், புரிஞ்சவன் 'பிஸ்தா'

Advertisement
கருத்துகள் (19) கருத்தைப் பதிவு செய்ய
ஏப்., 2ல் ரிலீஸ் - கார்த்தி நெகிழ்ச்சிஏப்., 2ல் ரிலீஸ் - கார்த்தி நெகிழ்ச்சி சிம்புவை பற்றி பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பப்லு! சிம்புவை பற்றி பேசி மீண்டும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (19)

Neutrallite - Singapore,சிங்கப்பூர்
04 ஏப், 2022 - 16:07 Report Abuse
Neutrallite அந்தாளு காவி துணிய கட் பண்ணறது மட்டும் வந்திருக்கு...as usual anti-BJP stand...அப்போ தான மக்களுக்கு பிடிக்குது. இதுக்கு பிஜேபி ரியாக்ட் பண்ணாம இருந்தாலே படம் ஊத்திக்கும்...
Rate this:
Nesan - KARAIKUDI,இந்தியா
04 ஏப், 2022 - 12:32 Report Abuse
Nesan ட்ரைலர் பாக்க முடியல படமும் மொக்கையாத்தான் இருக்கும்
Rate this:
mohan - chennai,இந்தியா
04 ஏப், 2022 - 18:12Report Abuse
mohanபீஸ்ட் படத்துல ஒரு வசனம் விஜய் பேசுவாரு முதல்ல பயம்தான் இருக்கும் போக போக பயங்கரமா இருக்கும் சொல்லுவாரு இந்த படத்த பார்த்தவங்க சொல்லுறாங்க ட்ரைலர் முதல்ல மொக்கயா தான் இருக்கு முழு படம் பார்த்தா படு கேவலமா இருக்கும்னு இதெல்ல ஒரு பட இதுக்கு ஒரு ட்ரைலர்ரொம்ப கேவலமா இருக்கு...
Rate this:
Raj - Chennai,இந்தியா
04 ஏப், 2022 - 11:32 Report Abuse
Raj Die Hard உல்டா ?
Rate this:
Venkatasubramanian krishnamurthy - குடியாத்தம்.,இந்தியா
04 ஏப், 2022 - 11:04 Report Abuse
Venkatasubramanian krishnamurthy இனிமே அவர் யோகி விஜய்பாபு.
Rate this:
mohan - chennai,இந்தியா
04 ஏப், 2022 - 18:17Report Abuse
mohanவெங்கட் சார் சரியாக சொன்னிங்க யோகிப்பாபு கொஞ்சமாவது இயல்பா நடிக்க தெரியும் ஆனா விஜய்க்கு ? மானம் கேட்ட விஜய் ரசிகர்களுக்கு சரியான செருப்படி இந்த படத்தின் ட்ரைலர் பேச்சாடா பேசுனீங்க ட்ரைலர் வருவதற்கு முன்னாடி ட்ரைலர் வைத்தபின்னடி எவனும் வாய தெறக்கலையே எந்த விஜய் ரசிகனாவது இதற்க்கு மறுப்பு சொல்ல முடியுமா ?...
Rate this:
DVRR - Kolkata,இந்தியா
03 ஏப், 2022 - 19:02 Report Abuse
DVRR சே சே கருமமாக அசிங்கமாக இருக்கு அவ்வளவு தான்
Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Coffee with Kadhal
  • காபி வித் காதல்
  • நடிகர் : ஜீவா ,
  • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
  • இயக்குனர் :சுந்தர்.சி
  Tamil New Film Sardar
  • சர்தார்
  • நடிகர் : கார்த்தி
  • நடிகை : ராஷி கண்ணா
  • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  dinamalar advertisement tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in