மலையாளத்தில் கல்யாணிக்கு நடந்தது : திரிஷா, நயன்தாராவுக்கு நடக்கலை | பார்த்திபன் இயக்கும் படத்தில் ‛லப்பர் பந்து' ஹீரோயின் | காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? |
வெள்ளித்திரை, சின்னத்திரை என அனைத்திலும் ரவுண்டு கட்டி கலக்கி வருபவர் நடிகர் ப்ருத்விராஜ் என்கிற பப்லு. இவருக்கும் நடிகர் சிலம்பரசன் குடும்பத்திற்கும் நெருங்கிய நட்பு உண்டு. ஆனால், சில வருடங்களுக்கு முன் 'ஜோடி நம்பர் ஒன் சீசன் 2' நிகழ்ச்சியின் போது போட்டியாளராக இருந்த பப்லுவுக்கும், நடுவராக இருந்த சிம்புவுக்கு இடையே முட்டிக்கொண்டது. அன்றைய காலக்கட்டத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட சினிமா நட்சத்திரங்களின் சண்டையில் இதுவும் ஒன்று. அப்போதே சிம்புவின் ரசிகர்கள் பலர் பப்லுவை கோபத்தில் திட்டித்தீர்த்தனர்.
இந்நிலையில், சமீபத்தில் நடிகர் பப்லு அளித்த பேட்டி ஒன்றில் மீண்டும் சிம்புவை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதில் அவர், 'சிம்பு நான் தூக்கி வளர்த்த பையன். நான் என்ன சொன்னாலும் கேட்பார். ஆனால் வாய் தான் கொஞ்சம் அதிகம்' என கூறியுள்ளார். இதை பார்த்த சிம்புவின் ரசிகர்கள் பப்லு மீது கடும் கோபத்தில் உள்ளனர். சோஷியல் மீடியாக்களில் பப்லுவுக்கு எதிராக கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.