துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன்… தொடரும் காதல்?? | மார்ச் 6ல் வெளியாகிறது ரச்சிதா நடித்த ஹாரர் படம் | சாய் பல்லவி நடிப்பை முன்மாதிரியாக கொண்டு நடித்தேன் : மானசா வாரணாசி ஓபன் டாக் | சொந்த தொகுதியிலேயே வீடு கட்டும் பணியை துவங்கிய பாலகிருஷ்ணா | மும்பை படப்பிடிப்பில் படக்குழுவினருக்காக சென்னையிலிருந்து உணவு வரவழைத்த பிரபாஸ் | சிவராஜ்குமாருக்கு கர்நாடக முதல்வர் வாழ்த்து | சாய் அபயங்கர், கயாடு லோகர் புதிய ஜோடி | சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' பட தலைப்புக்கு சிக்கல் | போலீஸ் அதிகாரியாக சசிகுமார் | இரண்டாவது திருமணம் குறித்த சலசலப்புக்கு மீனா பதில் |

தமிழ் சினிமாவில் பிஸியாக இசையமைத்து வரும் அணிருத் சமீபகாலமாக தெலுங்கில் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ஜிவி.பிரகாஷின் கவனமும் தெலுங்கு சினிமா பக்கம் திருப்பி இருக்கிறது. தற்போது அவர் தெலுங்கில் டைகர் நாகேஸ்வரராவ் இயக்கும் புதிய படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ஐந்து மொழிகளில் உருவாகும் இந்தப்படத்தில் ரவிதேஜா நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக காயத்ரி பரத்வாஜ் நடிக்கிறார். இந்தப்படத்தின் பூஜை நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற போது அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சிரஞ்சீவி, ரவிதேஜா, ஜிவி.பிரகாஷ் உட்பட அனைவரையும் வாழ்த்தி இருக்கிறார். அது குறித்த வீடியோவை ஜிவி .பிரகாஷ் தனது சோசியல் மீடியாவில் பதிவு செய்து சிரஞ்சீவிக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.




