'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தெலுங்கில் சிரஞ்சீவி, ராம்சரண் இணைந்து நடித்துள்ள படம் ஆச்சாரியா. கொரட்டல்ல சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் காஜல் அகர்வால், பூஜா ஹெக்டே ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்டப் பணிகள் நடந்து வந்த நிலையில் ஏப்ரல் 29ஆம் தேதி படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ஆச்சாரியா படத்தின் புரமோஷனை படக்குழு தொடங்கி இருக்கிறது. இதையடுத்து இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்துள்ள காஜல் அகர்வால், தானும் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருவதாக தெரிவித்திருக்கிறார். ஆனால் படத்தின் தயாரிப்பாளரான நடிகர் ராம் சரண், தற்போது நீங்கள் கர்ப்பமாக இருப்பதால் ரிஸ்க் எடுக்க வேண்டாம். புரமோஷன் நிகழ்ச்சிகளை நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று காஜலை தடுத்து விட்டாராம். இதனால் சிரஞ்சீவி, ராம்சரண், பூஜாஹெக்டே ஆகியோர் மட்டுமே பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.