கமல் மகள் ஸ்ருதிக்கு கருப்பை வீக்க பாதிப்பு | ‛மயோன் 2' உருவாகிறது | யானை படம் : பிரியா பவானி சங்கர் நம்பிக்கை | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கிர்த்தி ஷெட்டி | திருமணம் குறித்து எந்த ஐடியாவும் இல்லை : ஸ்ருதிஹாசன் | மதுரைக்கார இளைஞனாக மாறும் ஆர்யா | கமலுக்கு கோல்டன் விசா | பிரித்விராஜ் ஒரு கேரள கமல் : விவேக் ஓபராய் புகழாரம் | பாலியல் புகார் நடிகரின் ஜாமீனை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தை நாடும் கேரள அரசு | இயக்குனர் சங்கத்திற்காக ஒன்றிணையும் ஜீத்து ஜோசப் - பிரித்விராஜ் |
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் அனைத்து படங்களிலும் அவரது தம்பி பிரேம்ஜி முக்கிய வேடங்களில் நடித்து வந்தார். அதுபோல் தற்போது வெங்கட் பிரபு இயக்கி திரைக்கு வந்துள்ள மன்மதலீலை படத்திற்கு இசையமைத்திருக்கிறார் பிரேம்ஜி. இந்த நிலையில் தனது அண்ணன் வெங்கட் பிரபுவை கலாய்க்கும் வகையில் 2007ஆம் ஆண்டு வசந்தம் வந்தாச்சு என்ற படத்தில் நந்திதா ஜெனிபர் உடன் வெங்கட் பிரபு நடித்திருந்த ஒரு புகைப்படத்தை மன்மதலீலை படத்தோடு ஒப்பிட்டு வெளியிட்டிருந்தார் பிரேம்ஜி. அதையடுத்து தனது தம்பிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிரேம்ஜி ஒரு நடிகையுடன் இணைந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இந்த வாங்கிக்கோ என்று கலாய்த்து உள்ளார் வெங்கட் பிரபு. தற்போது மன்மதலீலை படம் வெளியாகி இருக்கும் நிலையில் அண்ணனும் தம்பியும் இப்படி மாறிமாறி புகைப்படங்கள் மூலம் ஜாலியாக மோதிக் கொண்டது வைரலானது.