'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழில் 1987ல் ராமராஜன் நாயகனாக நடித்த எங்க ஊரு பாட்டுக்காரன் என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை பானுப்பிரியாவின் தங்கை நிஷாந்தி என்ற சாந்திப்பிரியா. அதையடுத்து தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பரவலாக சில படங்களில் நடித்த நிஷாந்தி ஒருகட்டத்தில் சினிமாவை விட்டு வெளியேறிவிட்டார்.
தற்போது 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கிறார். இந்தியாவின் நைட்டிங்கேள் என்று போற்றப்படும் சரோஜினி நாயுடுவின் வாழ்க்கை வரலாறு படத்தில் தான் அவர் ரீஎன்ட்ரி கொடுக்கப் போகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், சுதந்திரத்திற்காக போராடிய லட்சிய பெண்மணி சரோஜினி நாயுடுவின் கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததை மிகப் பெரிய பாக்கியமாக கருதுகிறேன் என்று தெரிவித்திருக்கிறார். வினய் சந்திரா இயக்கும் இப்படம் ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட 4 மொழிகளில் தயாராகிறது.