பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

ராம் கோபால் வர்மா இயக்கத்தில் உருவாகி உள்ள லெஸ்பியன் கிரைம் படம் ‛டேஞ்சரஸ்'. நைனா கங்குலி, அப்சரா நடித்துள்ளனர். இப்படம் தமிழில் ‛காதல் காதல் தான்' என்ற பெயரில் வெளியாகிறது. இப்படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.
நைனா கங்குலி கூறுகையில், ‛‛ இந்த மாதிரி கதையை எடுப்பது மிகவும் கடினம். வழக்கமாக நாயகன் நாயகி காதலிப்பார்கள், ஆனால் இதில் இரண்டு பெண்கள் காதலிக்கிறார்கள். இதில் நடிப்பது எனக்கு மிகுந்த சவாலாக இருந்தது. இங்கு லெஸ்பியன் உறவு குற்றமாக பார்க்கப்படுகிறது. இது அவர்கள் குற்றமில்லை ஹார்மோன் சம்பந்தப்பட்டது. இதில் நடித்தது மகிழ்ச்சி'' என்றார்.
அப்சரா கூறுகையில், ‛‛படம் ஓரின சேர்க்கையாளர்கள் பற்றியது. இது நம் சமூகத்தில் குற்றமாக பார்க்கப்படுகிறது. ஓரின சேர்க்கையாளர்கள் குற்றவாளிகள் அல்ல அவர்களும் கடவுளின் குழந்தைகள் தான். இது ஒரு கமர்ஷியல் படம், இதில் இரண்டு பெண்களுக்கிடையேயான காதல் இருக்கிறது. பார்வையாளர்கள் அவர்களின் காதலை புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன். இரண்டு ஹிரோயின்களுக்கிடையே டூயட் சாங் இருப்பது இதுவே முதல் முறை. ஒரு புதுமையான படத்தில் நான் இருப்பது மகிழ்ச்சி'' என்றார்.
ராம் கோபால் வர்மா கூறுகையில், ‛‛ஓரின சேர்க்கையாளர்களை நாம் பரிதாபமாக தான் பார்க்கிறோம், அரசாங்கமே அனுமதி அளித்தாலும் நம் பார்வை மாறுவதில்லை. ஒரு காதல் ஜோடியை வைத்து நிறைய க்ரைம் திரில்லர் கதைகள் வந்துள்ளது. அதை மாற்றலாம் என்று தான் இதை எழுதினேன். இரண்டு இளம் பெண்கள், அவர்கள் ஏன் லெஸ்பியன் உறவுக்கு செல்கிறார்கள், அவர்களை சமூகம் எப்படி பார்க்கிறது அவர்களின் பிரச்சனை என்ன என்று யோசிக்கும்போது அதனை மையமாக வைத்து இதை உருவாக்கலாம் என்று இப்படத்தை எடுத்தோம். படமாக்குவதில் நிறைய சவால்கள் இருந்தது. இரண்டு ஹிரோயின்களை வைத்து டூயட் பாடல் எடுப்பதே இந்திய சினிமாவில் வித்தியாசம் தான். நைனா கங்குலி, அப்சரா இருவருக்கும் அவர்களின் தைரியத்திற்கும் நன்றி. அவர்களால் தான் இப்படம் சாத்தியமானது. படம் உங்களுக்கு பிடிக்கும் நன்றி'' என்றார்.




