2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

அறிமுக இயக்குநர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் தயாராகி வரும் முதல் திரைப்படம் 'பாட்னர்'. இதில் நடிகர் ஆதி நடிக்க அவருடன் இணைந்து நடிகை ஹன்சிகா நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகை பாலக் லால்வானி, யோகி பாபு, ரோபோ சங்கர், ஜான் விஜய், ரவி மரியா, பாண்டியராஜன், முனிஷ் காந்த், தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சபீர் அஹமத் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.
ராயல் பர்சுனா கிரியேசன்ஸ் சார்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது. இதை நடிகர் ஆர்யா வெளியிட்டார்.