‛காந்தாரா: சாப்டர் 1' படத்திற்காக 3 ஆண்டுகள் அர்ப்பணிப்பு: ரிஷப் ஷெட்டி | கல்கி -2 படத்தில் தீபிகா படுகோனேவுக்கு பதிலாக இணையும் சாய் பல்லவி! | புலம்பும் புயல் காமெடியன் | ராதிகா தாயார் மறைவு: நேரில் சென்று ஆறுதல் சொன்ன பாரதிராஜா | பிளாஷ்பேக்: தென்னிந்தியத் திரையுலகின் முதல் பெண் இயக்குநர் 'சினிமா ராணி' டி பி ராஜலக்ஷ்மி இயக்கிய 'மிஸ் கமலா' | சென்னையில் நடந்த 80ஸ் நடிகர், நடிகைகள் ரீ யூனியன் | அரச கட்டளை, தளபதி, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் - ஞாயிறு திரைப்படங்கள் | இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன? | நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம் | கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது |
நானும் ரவுடிதான் படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய்சேதுபதியை கதாநாயகனாக வைத்து காத்துவாக்குல ரெண்டு காதல் என்கிற படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன். இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதன் படப்பிடிப்பு முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அதே சமயம் இந்த படத்தில் இடம்பெறும் டுடூ டுடு என்கிற சிறப்பு பாடலின் படப்பிடிப்பு மட்டும் பாக்கி இருந்தது. இந்தநிலையில் அந்த பாடலுக்கான படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் சத்தமின்றி நடைபெற்றுள்ளது.
இந்த பாடலின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சமீபத்தில் சென்னை வந்து சென்றுள்ளார் சமந்தா. விஜய்சேதுபதிக்கும் சமந்தாவுக்கும் இடையேயான பாடல் தான் என்றாலும் படப்பிடிப்பு தளத்தில் நயன்தாராவும் இருந்துள்ளார். சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஹிட்டான ஓ சொல்றியா மாமா என்கிற பாடலை தொடர்ந்து இந்த பாடலும் ரசிகர்களின் ஹிட் லிஸ்டில் இடம் பிடிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த பாடலுக்கு கணேஷ் ஆச்சார்யா நடனம் வடிவமைத்துள்ளார்