ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் ஆச்சார்யா.. கொரட்டால சிவா இயக்கியுள்ள இந்தப்படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார். சிரஞ்சீவியின் மகன் நடிகர் ராம்சரண் தான் இந்தப்படத்தை தயாரித்துள்ளார் என்பதுடன் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றிலும் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும் நடித்துள்ளார்.
இந்தப்படத்தில் ராம்சரண் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் என்று ஆரம்பத்தில் சொல்லப்பட்டு வந்த நிலையில், அவர் படம் முழுதும் வருகின்ற முக்கியமான கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளார், அதனால் தான் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்கிற தகவலும் வெளியானது.
இந்தநிலையில் இந்தப்படத்தில் சிரஞ்சீவியும் ராம்சரணும் இணைந்து நடித்துள்ள காட்சிகள் மட்டுமே சுமார் 25 நிமிடங்கள் வரை இருக்கும் என்றும், சிரஞ்சீவியுடன் இல்லாமல் பூஜா ஹெக்டேவுக்கும் அவருக்குமான காட்சிகள், பாடல்கள் என கிட்டத்தட்ட அவர் படத்தின் இன்னொரு ஹீரோவாகவே நடித்துள்ளார் என தற்போது படக்குழு தரப்பில் இருந்து உறுதியான செய்திகள் வெளியாகியுள்ளன.