Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆர்ஆர்ஆர் - 'அப்செட்' ஆகிவிட்டாரா ஆலியா பட்

28 மார், 2022 - 19:34 IST
எழுத்தின் அளவு:
Is-Alia-bhatt-upset-over-RRR?

ஹிந்தித் திரையுலகத்தின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆலியா பட். அவர் நடித்த முதல் தென்னிந்தியப் படமான ராஜமவுலி இயக்கிய 'ஆர்ஆர்ஆர்' படம் கடந்த வாரம் வெளியானது. படத்தில் ஆலியா தான் கதாநாயகி என்று சொன்னார்கள். ராம் சரணின் ஜோடியாக நடித்தவரும் அவர்தான். படம் வருதவற்கு முன்பே ஆலியா பட் படத்தில் பதினைந்து நிமிடம் மட்டுமே வருவார் என்றும் தகவல் வெளியானது. நேரம் குறைவாக இருந்தாலும் பிரம்மாண்டமான படம் என்பதால் இப்படத்தில் நடிக்க ஆலியா சம்மதித்தார் என்றும் சொன்னார்கள்.

ஆனால், படம் வெளிவந்த பிறகு ஆலியா பட் பயங்கரமாக 'அப்செட்' ஆகிவிட்டாராம். படத்தில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒரு கதாநாயகிக்குரிய முக்கியத்துவமான காட்சிகளாக இல்லாமல் இருந்தது. ஒரு துணை கதாபாத்திரத்தில் நடித்தது போல் தான் இருக்கிறது என்றும் விமர்சனங்கள் வெளிவந்தன. அதே சமயம் ஜுனியர் என்டிஆர் ஜோடியாக நடித்த ஒலிவியா மோரிஸ் சம்பந்தப்பட்ட காட்சிகள், ஆலியாவின் காட்சிகளை விட சிறப்பாக இருந்தது என்ற கருத்தும் வெளியானது.

சமீபத்தில்தான் பாலிவுட்டில் ஆலியா முதன்மைக் கதாநாயகியாக நடித்த 'கங்குபாய் கத்தியவாடி' படம் மூலம் நல்ல பெயரையும், பாராட்டுக்களையும் பெற்றார். அதற்கடுத்து இப்படி ஒரு கதாபாத்திரத்தில் ஆலியா நடித்திருக்கக் கூடாது என்றும் பாலிவுட்டில் பேசுகிறார்களாம். எனவே, தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் 'ஆர்ஆர்ஆர்' சம்பந்தப்பட்ட பல பதிவுகளை 'டெலிட்' செய்துவிட்டார் ஆலியா. மேலும், சமூக வலைத்தளங்களில் இயக்குனர் ராஜமவுலியை 'அன்பாலோ' செய்துவிட்டாராம் ஆலியா.

ஆலியாவின் இந்த செயல் தெலுங்கு ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படம் வெளியான சில நாட்களுக்குள் இது நடந்திருப்பதும் ஆச்சரியமாக உள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
நானே வருவேன் தனுஷுக்கு ஜோடியாக சுவீடன் நடிகைநானே வருவேன் தனுஷுக்கு ஜோடியாக ... பத்மஸ்ரீ விருது பெற்றார் நடிகை சவுகார் ஜானகி பத்மஸ்ரீ விருது பெற்றார் நடிகை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

P.Niranjan - colombo,இலங்கை
29 மார், 2022 - 11:17 Report Abuse
P.Niranjan கோடிகணக்கில துட்டு வாங்கிட்டு தானே இந்தம்மா நடிச்சிருக்கும். காசு குடுத்தவங்களுக்கே அது பத்தி கவலையில்ல? அப்ப இவங்களுக்கே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in